LUCKY PROMOTION
RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You have to Log in to comment.


Introduction

Posted in forum ''

ZinemaClubs

ZinemaClubs
தயாரிப்பாளர்

வணக்கம்!

சினிமா கிளப்பிற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்றும், சினிமாத்துறையில் பணியாற்ற வேண்டும் என்றும் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். ஆனால் எங்கு சென்று வாய்ப்பு தேடுவது, எப்படி தங்கள் திறமையினை வெளிப்படுத்துவது என்பது தான் குழப்பமான ஒன்று. எனவே உங்களின் வசதிக்காக இந்த வாய்ப்பினை நாங்கள் ஏற்படுத்தி உள்ளோம். இங்கே உங்கள் புகைப்படத்தையும், தகவல்களையும் வெளியிட்டு முறையான நபர்களிடம் வாய்ப்பையும் பெற முடியும். இதற்காக நாங்கள் எந்த விதமான கட்டணமும் வசூலிப்பதில்லை. இது முற்றிலும் இலவசமானது.

சினிமாத்துறையில் இருக்கும் முக்கியமான பலர் இந்த தளத்தினை பார்வையிடுவதால் நேரடியாக அவர்களின் பார்வைக்கு உங்களை கொண்டு செல்கிறோம். எனவே உங்களுடைய சிறந்த புகைப் படங்களையும், உங்களின் திறமையினையும் இங்கே வெளியிட்டு வாய்ப்பைத் தேடிக் கொள்ளலாம்.

சினிமா என்பது அழகியல் நோக்கம் உடையது. எனவே நீங்கள் வெளியிடும் புகைப்படங்கள் பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட மாடலிங் புகைப்படங்களாக இருந்தால் உங்கள் மீதான கவனம் ஈர்க்கப்படும்.

தகுதியும் திறமையும் உள்ள அனைவருக்கும் கண்டிப்பாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும். எனவே இன்றே உங்களைப் பற்றிய விவரத்தினை வெளியிட்டு வாய்ப்பைத் தேடிக் கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கையும், ஆர்வமும், விடாமுயற்சியும் இருப்பவர்கள் மட்டும் சினிமா கிளப்பில் உறுப்பினராக இணைந்து வெற்றி பெறுங்கள்.

இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டும், உறுப்பினர்களின் ஈடுபாட்டைக் கொண்டும், எதிகாலத்தில் பல புதுமையான சிறப்பு அம்சங்களை வழங்கக் காத்திருக்கிறோம்.

CinemaClubs.
15/6/2012, 12:41 amPost 1
You cannot reply to topics in this forum