LUCKY PROMOTION
RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You have to Log in to comment.


மறுபடியும் ஒரு காதல் - வரும் ஜூன் 15 வெளியீடு!

Posted in forum ''

Admin

Admin
Admin

11/6/2012, 11:47 pmPost 1
Admin

Admin
Admin

மறுபடியும் ஒரு காதல் - வரும் ஜூன் 15 வெளியீடு! 4581_L_galvpf

இரண்டு நாயகிகள், ஒரு செமையான குத்துப் பாட்டு என களேபரமான அம்சங்களோடு வெளிவருகிறது "மறுபடியம் ஒரு காதல்"

மலையாளத்து அனிருத்தை நாயகனாக்கி இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். லண்டனிலிருந்து ஜோஷ்னா ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக வாணி கிஷோர் இருக்கிறார். கூடவே சஞ்சனா சிங்கும் இருக்கிறார். இரு நாயகிகளுக்கும் வெயிட்டான ரோலாம். சஞ்சனா சிங்குக்கு அமர்க்களமான குத்துப் பாட்டை கையில் கொடுத்து ஆட விட்டுள்ளனர். அவரது ஆட்டம் பேசப்படும்.

இப்‌படத்‌தி‌ன்‌ கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌‌ இயக்‌கி‌ உள்‌ளா‌ர்‌ ‌வா‌சு பா‌ஸ்‌கர்‌. இந்‌த படத்‌தி‌ல்‌அனி‌ரூ‌த்‌ கதா‌நா‌யகனா‌க நடி‌க்‌கி‌றா‌ர்‌. இவர்‌ கே‌ரள வரவு‌. ஹலோ‌, மயூ‌ரம்‌, ஸ்‌கெ‌ட்‌ச்‌ போ‌ன்‌ற பல மலை‌யா‌ள வெ‌ற்‌றி‌படங்‌களி‌ல்‌ நடி‌த்‌தவர்‌.

கதா‌நா‌யகி‌யா‌க லண்‌டனை‌ச்‌ சே‌ர்‌ந்‌த ஜோ‌ஸ்‌னா‌ நடி‌க்‌கி‌றா‌ர். இவர்‌ கவி‌ஞர்‌ வா‌லி‌ இயக்‌கி‌ய வடை‌மா‌லை‌ படத்‌தி‌ல்‌ கதா‌நா‌யகி‌யா‌க நடி‌த்‌த சரோ‌ஜா‌வி‌ன்‌ மகள்‌. இது பழை‌ய அறி‌முகம்‌. லே‌ட்‌டஸ்‌ட்‌டா‌ சொ‌ன்‌னா‌ நடி‌கர்‌ ஜெ‌யம்‌ ரவி‌யி‌ன்‌ உறவி‌னர்‌ இவர்‌.‌ இன்‌னொ‌ரு கதா‌நா‌யகி‌யா‌க கே‌ரளா‌வை‌ச்‌ சே‌ர்‌ந்‌த வா‌ணி‌கி‌ஷோ‌ர்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.

"மறுபடியம் ஒரு காதல்" படத்தில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் அரசியல் ஈடுபாட்டால் ஏற்பட்ட இடைவேளைக்குப் பிறகு இந்தப் படத்தில் நடிகர் "வடிவேலு" நடித்துள்ளாராம். போ‌லி‌ டா‌க்‌டரா‌க வடி‌வே‌ல்‌ நகை‌ச்‌சுவை‌ செ‌ய்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. சுமன்‌, ஒய்‌.ஜி‌. மகே‌ந்‌தி‌ரன்‌, ஸ்ரீரஞ்‌சனி‌, போ‌ன்‌றவர்‌களும்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌. ரே‌ணி‌குண்‌டா‌ படத்‌தி‌ல்‌ நடி‌த்‌த சஞ்‌சனா‌, "சலக்‌கு சலக்‌கு" என்‌ற பா‌டலுக்‌கு நடனம்‌ ஆடி‌யிருக்‌கி‌றா‌ர்‌. இவருடன்‌ இணை‌ந்‌து நடனமா‌டி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ பத்‌தி‌ரி‌க்‌கை‌யா‌ளர்‌ தே‌வரா‌ஜ்‌. யோ‌கி‌ படத்‌தி‌ல்‌ அமீ‌ரி‌ன்‌ அப்‌பா‌வா‌க நடி‌த்‌தவர்‌ தா‌ன்‌ இந்‌த தே‌வரா‌ஜ்‌. மே‌ மா‌தம்‌ என்‌ற இன்‌னொ‌ரு குத்‌து பா‌டலுக்‌கு நடனம்‌ ஆடி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ கல்‌பனா‌.

லண்‌டனி‌ல்‌ தொ‌டங்‌கி‌ செ‌ன்‌னை‌யி‌ல்‌ முடி‌யு‌ம்‌ இந்‌த படத்‌தி‌ன்‌ தி‌ரை‌க்‌கதை‌ மருத்‌துவக்‌ கல்‌லூ‌ரி‌ பி‌ன்‌னணி‌யி‌ல்‌ நி‌கழ்‌கி‌ன்‌ற எதா‌ர்‌த்‌தமா‌ன கா‌தல்‌ கதை‌.
படம்‌ பற்‌றி‌ இயக்‌குனர்‌ "வா‌சு பா‌ஸ்‌கர்‌" கூறுகை‌யி‌ல், “பு‌து முகங்‌களை‌ வை‌த்‌து எடுக்‌கப்‌ பட்‌ட படமா‌க இருந்‌தா‌லும்‌, பெ‌ரி‌ய ஹீ‌ரோ‌க்‌களி‌ன்‌ படங்‌களுக்‌கு நி‌கரா‌க மி‌கப்‌ பெ‌ரி‌ய பட்‌ஜெ‌ட்‌டி‌ல்‌ இந்‌த படத்‌தை‌ தயா‌ரி‌த்‌தி‌ருக்‌கி‌றோ‌ம்‌. கம்‌யூ‌ட்‌டர்‌ கி‌ரா‌பி‌க்‌ஸ்‌ கா‌ட்‌சி‌களை‌ இது கி‌ரா‌பி‌க்‌ஸ்‌ வொ‌ர்‌க்‌ என்‌று தெ‌ரி‌ய அளவி‌ற்‌கு உலகத்‌ தரத்‌தி‌ல்‌ ஐம்‌பது லட்‌ச ரூ‌பா‌ய்‌ செ‌லவி‌ல்‌ உருவா‌க்‌கி‌யி‌ருக்‌கி‌றோ‌ம்‌. இதுவரை‌ எத்‌தனை‌யோ‌ கா‌தல்‌ படங்‌களை‌ பா‌ர்‌த்‌தி‌ருப்‌போ‌ம்‌ அதி‌லி‌ருந்‌து முற்‌றி‌லும்‌ மா‌றுப்‌பட்‌ட கா‌தல்‌ கதை‌யா‌க இந்‌த படம்‌ இருக்‌கும்‌. வி‌ல்‌லன்‌ கி‌டை‌யா‌து... கா‌தலுக்‌கு எதி‌ர்‌ப்‌பு‌ம்‌ கி‌டை‌யா‌து.... ஆனா‌ல்‌ கா‌தலர்‌கள்‌ ஒன்‌று சே‌ர முடி‌யாத அளவு‌க்‌கு பி‌ரச்‌சி‌னை‌கள்‌ துரத்‌தி‌க்‌ கொ‌ண்‌டே‌ இருக்‌கும்‌!

அந்‌த பி‌ரச்‌சி‌னை‌கள்‌ எப்‌படி‌ முறி‌யடி‌த்‌து வா‌ழ்‌க்‌கை‌யி‌ல்‌ இணை‌கி‌றா‌ர்‌கள்‌ என்‌பது க்‌ளை‌மா‌க்‌ஸ்‌!!

படத்‌தி‌ல்‌ நடி‌த்‌தி‌ருக்‌கும்‌ அணை‌வரும்‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தை‌ உணர்‌ந்‌து நடி‌த்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌. சுமன்‌ ஸா‌ரி‌ன்‌ கதா‌பா‌த்‌தி‌ரம்‌ நி‌ச்‌சயமா‌க பெ‌ரி‌ய அளவி‌ல்‌பே‌சப்‌படும்‌. அம்‌பா‌ணி‌ மா‌தி‌ரி‌யா‌ன பி‌ஸ்‌னஸ்‌ மே‌ன்‌, பொ‌றுப்‌பு‌ள்‌ள அப்‌பா‌, என்‌று கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ வா‌ழ்‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ சுமன்‌ ஸா‌ர்‌. நீ‌ண்‌ட இடை‌வெ‌ளி‌க்‌கு பி‌றகு ஒய்‌.ஜி‌.மகே‌ந்‌தி‌ரன்‌ ஸா‌ர்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவருடை‌ய கதா‌பா‌த்‌தி‌ரமும்‌ பே‌சப்‌படும்‌ வி‌தமா‌க இருக்‌கும்‌” என்‌றா‌ர்‌ அவர்‌.

ஸ்ரீகா‌ந்‌த்‌ தே‌வா‌ இசை‌யமை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. படத்‌தி‌ன்‌ பி‌ன்‌னணி‌ இசை‌க்‌கா‌க ஒரு மா‌தம்‌ பெ‌ங்‌களூ‌ரி‌ல்‌ தங்‌கி‌ கம்‌போ‌ஸி‌ங்‌செ‌ய்‌துள்‌ளனர்‌.

படத்‌தி‌ன்‌ பா‌டல்‌களை‌ யு‌னி‌செ‌ஸ்‌ நி‌றுவனம்‌ வா‌ங்‌கி‌யி‌ருக்‌கி‌றது. கவி‌ஞர்‌ வா‌லி‌ மூ‌ன்‌று பா‌டல்‌களை‌யு‌ம்‌, நா‌.முத்‌துக்‌குமா‌ர்‌ இரண்‌டு பா‌டல்‌களை‌யு‌ம்‌, கபி‌லன்‌, வா‌சு கோ‌கி‌லா‌ இருவரும்‌ தலா‌ ஒரு பா‌டலை‌யு‌ம்‌எழுதி‌யி‌ருக்‌கி‌ன்‌றனர்‌.
கதா‌நா‌யகி‌ ஹெ‌லி‌கா‌ப்‌டரி‌ல்‌ பறந்‌தபடி‌ நடி‌த்‌த கா‌தலா‌ கா‌தலா‌ கவி‌ஞன்‌ நீ‌, கவி‌தை‌ நா‌ன்‌ பா‌டலை‌ லண்‌டனி‌ல்‌ உள்‌ள கெ‌னே‌ரி‌வா‌ப்‌ பகுதி‌யி‌ல்‌ படமா‌க்‌கி‌யி‌ருக்‌கி‌ன்‌றனர்‌. செ‌ன்‌னை‌யி‌ல்‌ படப்‌பி‌டி‌ப்‌பை‌ முடி‌த்‌து, லண்‌டனி‌லும்‌ முப்‌பது நா‌ட்‌கள்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ நடத்‌தி‌ இருக்‌கி‌ன்‌றனர்‌. ரா‌ஜா‌ முகமது படத்‌ தொ‌குப்‌பு‌ செ‌ய்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. சூ‌ப்‌பர்‌ சுப்‌பரா‌யன்‌ சண்‌டை‌ப்‌ பயி‌ற்‌சி‌ அளி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.

வேதா' படத்திற்கு கதை எழுதி, அப்படத்தை தயாரித்த வாசு பாஸ்கர், அடுத்ததாக இயக்கி - தயாரித்திருக்கும் படம் 'மறுபடியும் ஒரு காதல்'. வே‌தா‌ படத்‌தை‌ தயா‌ரி‌த்‌த "கனெ‌க்‌ட்‌ பி‌லி‌ம்‌ மீ‌டி‌யா‌" பட நி‌றுவனம்‌ & சீ‌மா‌ மே‌கலை‌ இருவரும்‌ இணை‌ந்‌து இந்‌த படத்‌தை‌ தயா‌ரி‌த்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌.

"மறுபடியும் ஒரு காதல்" வெற்றியடைய ரசிகர்களாகிய உங்களின் ஆதரவை வேண்டி காத்திருக்கின்றனர் படக்குழுவினர்!
12/6/2012, 12:33 amPost 2
You cannot reply to topics in this forum